நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த 23 வயதான மீனவர் கார்சன், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலை கயிறு அறுந்து பலத்த காயத்துடன் கடலில் விழுந்தார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் தேடியும் கார்சனை கண்டுபிடிக்க முடியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் கடலில் விழுந்த மீனவர் கார்சனை கண்டெடுக்க உறவினர்களும், சக மீனவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.