உபி-யில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்ற செயல்களை அம்மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் திடீரென காவல்துறையினரால் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,
தொடர்ந்து எளிய மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதில் முதன்மை மாநிலமாக உபி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக அம்மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.