உபியில் 19 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து, முதுகு பகுதிகளில் உள்ள எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை,
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று உத்தர பிரதேசத்தின் ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததை அடுத்து,அவசர அவசரமாக பெண்ணின் உடலை போலீசார் எரித்த நிலையில், ஏடிஜிபி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனால் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.