பெண்ணொருவர் தான் தொலைத்த பொருளை தான் உயிருடன் இருக்கும் வரை தேட போவதாக கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சேர்ந்த மெலனா மோசட் என்பவர் அவரிடமிருந்த சென்டிமென்டான பொருள் ஒன்றை தொலைத்து உள்ளார். மொட்டை மாடியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு பிடித்தமான அந்தப் பொருள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனது உயிர் இருக்கும் வரை நான் தொலைத்ததை தேடுவேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அது விலைமதிப்பில்லாத நகையும் இல்லை பரம்பரை சொத்தும் இல்லை அது பத்து வருடம் பழமையான துருப்பிடித்த சைக்கிள். 2011 ஆம் ஆண்டு தென் அமெரிக்கா முழுவதையும் ஒரு வருடமாக அந்த சைக்கிளில் சுற்றி வந்துள்ளார். இதனால் அது அவருக்கு மிகவும் சென்டிமென்டான சைக்கிள். எனவே அந்த சைக்கிளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.