Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா…12 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,85,231 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 169 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20,891 ஆக அதிகரித்துள்ளது.அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதே சமயத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Categories

Tech |