Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…203 பேர் மீது வழக்குப் பதிவு… உத்திரபிரதேச போலீசார் அதிரடி…!!!

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் டெல்லி நோய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனால் போலீசின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் இழுத்துப் பிடித்து கீழே தள்ளினர். அதில் நிலைதடுமாறிய ராகுல்காந்தி தரையில் விழுந்தார்.அதன்பிறகு அப்பகுதியிலிருந்து பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல்காந்தி தரையிலிருந்து மேலே தூக்கப்பட்டார்.

அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்டு பிரியங்கா காந்தி பெரிதும் பதற்றம் அடைந்தார். அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு மாலை இருவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.இந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா காவல்துறையினர் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.

இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 203 காங்கிரஸ் தொண்டர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188, பிரிவு 269 மற்றும் 270 பிரிவு ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சில பெண் போலீசார் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி ஒரு பெண் காவல் துணை ஆய்வாளர் சீருடை கிழிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |