மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் இருக்கின்ற காந்தி நினைவிடம் மற்றும் விஜய் பாட்டில் இருக்கின்ற சாஸ்திரி நினைவிடம் ஆகிய இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
அவர்கள் இருவரையும் நினைவுகூர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாய்மை,அகிம்சை மற்றும் அன்பு பற்றிய மகாத்மா காந்தியின் கொள்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் உலக நலனுக்காக பெரும் பாதையை அமைகின்றது. அவர் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய சிறந்த தலைவர்”என்று அவர் பதிவிட்டுள்ளார். சாஸ்திரி நினைவிடத்தில் அவரின் மகன்கள் சுனில் சாஸ்திரி மற்றும் மனைவி ஆகிய இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.