Categories
தேசிய செய்திகள்

ஏன் அவசரப்பட்டிங்க…? டிஜிபிக்கு கடிதம்…. தேசிய பெண்கள் ஆணையம் அதிரடி….!!

இளம் பெண்ணின் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி அவசரமாக காவல் துறையினர்  எரித்ததுக்கு விளக்கம் அளிக்க கோரிதேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன  இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி காவல் துறையினர் அவசரமாக எரித்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணையம் அவர்களாகவே முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் உத்தரப் பிரதேச போலீஸ் டி.ஜி.பிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் “அந்த இளம் பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கிவைத்துவிட்டு, நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு போலீசார் அவசரம் காட்டியது ஏன்?விளக்கமளிக்க வேண்டும், விரைவில் பதில் அனுப்புங்கள்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |