ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆந்திர மாநில வனத்துறை ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வனத்துறையில் 59 வயதுடைய ரமணா மூர்த்தி என்பவரை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.அவர் ஹைதராபாத் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் அந்த விபரீத முடிவை எடுப்பதற்கான காரணம் என்னவென்று எவருக்கும் தெரியவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.