இந்தியாவில் கொரோனா பதிகம் பரவுவதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவது பற்றி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆராய்ந்து கொரோனா பரவுகின்ற முறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், தங்களிடம் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்புவது கிடையாது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 சதவீதம் பேர் மட்டுமே நாட்டில் புதிதாக 60% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்புகிறார்கள்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களும் உயிர் இழப்பவர்களும் 40 முதல் 69 வயது உடையவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அதிக வருமானம் உள்ள நாடுகளில் இது அதிக அளவில் இருக்கின்றது. 16 வயது வரை உள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் தொடர்பில் உள்ள சம வயதினருக்கு கொரோனாவை பரப்புகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் 5 முதல் 17 வயது இடையே 5 சதவீதம் மட்டுமே இருக்கின்றது. உயிரிழந்தவர்கள் 85 வயது கடந்தவர்கள் 16% பேர் இருக்கின்றனர்.மேலும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 63% பேர் ஒரு நாள்பட்ட நோயை கொண்டிருந்தவர்கள்.
36% பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சுகாதார பிரச்சனைகளை கொண்டவர்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 45 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தாக்கியவர்கள். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நோய் இயக்கவியல்,பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தை சார்ந்த விஞ்ஞானி ரமணன் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், “இந்த கண்டுபிடிப்புகள் கொரோனா அதிகம் பாதித்த குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நோய்த்தொற்றின் பாதையை எடுத்துக் காட்டுகின்றன”என்று கூறியுள்ளனர்.