கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.