Categories
தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா காந்தி… சிறிது நேரத்தில் விடுதலை…செய்த போலீஸ்…!!!

உத்திரப்பிரதேச மாநில காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் டெல்லி நோய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனால் போலீசின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரின் தடையை மீறி சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் இழுத்துப் பிடித்து கீழே தள்ளினர். அதில் நிலைதடுமாறிய ராகுல்காந்தி தரையில் விழுந்தார்.அதன்பிறகு அப்பகுதியிலிருந்து பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல்காந்தி தரையிலிருந்து மேலே தூக்கப்பட்டார். அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்டு பிரியங்கா காந்தி பெரிதும் பதற்றம் அடைந்தார்.அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு மாலை இருவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் டெல்லிக்கு திரும்பி சென்றனர். அவர்களை உத்திரப்பிரதேச காவல்துறையினர் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.

Categories

Tech |