மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்,
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது.இதன் பின்னணியில் உள்ள மதவெறி,இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என்றும் பதிவிடப்பட்டு இருந்தது.