Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீர் மின் கசிவு…. தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகன்…. நேர்ந்த பெரும் சோகம்….!!

மின்கசிவால் தீ ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர்  நிஷா ஏஞ்சல். இவர் கணவரை பிரிந்து மகன் டென்னியுடன் வசித்து வருகின்றார். நேற்று மதியம் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் உள்தாழிட்டு நிஷா ஏஞ்சல் மற்றும் மகன் இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்நிலையில் வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.

அப்போது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதால் இரும்புக் கட்டிலில் இருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்து புகை மூட்டத்தில் மூச்சு திறனில் அம்மா மற்றும் மகன் இருவரும்  இறந்து கிடத்தனர் .இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூடுவாஞ்சேரி காவல்துறையினர்க்கு தகவல் அளித்ததனர்.தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து மின்கசிவு ஏற்பட்டு அதில் மூச்சு திணறி இருவரும் இறந்து போனார்கள்? அல்லது வேறு காரணமா என்று இரு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |