Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக் கொடுங்க… கொஞ்சம் பொறுமையாய் இரு… விரக்தியில் மாணவி எடுத்த… விபரீத முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான நாதஸ்ஸ்ரீ அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் அவருடன் உடன் பிறந்த அனைவரும் படித்து வருகின்றனர். நாதஸ் ஸ்ரீ கடந்த சில தினங்களாக தனது பெற்றோரிடம் தனது செல்போன் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அவரின் பெற்றோர் பொறுமையாக வாங்கித் தருகிறேன் என்று கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரின் பெற்றோர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்து வா என்று அவரை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற நாதஸ் ஸ்ரீ பெற்றோர்கள் தனக்கு செல்போன் வாங்கி தராததால் விரக்தியடைந்து விவசாய நிலத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.அதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றன.

 

Categories

Tech |