Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கித் தாங்க” காத்திருக்க சொன்ன பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு….!!

செல்போன் வாங்கி தராததால் 9 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்த்தவர் சௌந்தர்ராஜன்-சத்யவாணி தம்பதியினர். இவர்களுக்கு  நாதஸ் ஸ்ரீ (14),  பிரீத்தி(13), பத்மஸ்ரீ (11 )என மூன்று மகள்களும், யோகேஸ்வரன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நாதஸ்ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும், ப்ரீத்தி பத்மஸ்ரீ ,யோகேஸ்வரன் ஆகியோரும் படித்து வருகின்றனர். நாதஸ்ஸ்ரீ பெற்றோரிடம் செல்போன் வாங்கி தர வேண்டும் என கேட்டார் அதற்கு பெற்றோர்கள் பொறுமையாக வாங்கி தருகிறேன் என்று கூறி சமாதானம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாதஸ்ஸ்ரீயின் பெற்றோர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பார்த்து வா என்று அனுப்பினார். அங்கு சென்ற நாதஸ்ஸ்ரீ செல்போன் வாங்கிக் தரததால் வருத்தத்தில் இருந்த அவர்  விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தும்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தச்சம்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |