மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மைகள் அதிகம் கிடைக்கும். பலனை எதிர்பார்க்காமல் உங்களின் கடமைகளைச் செய்தால் நிச்சயமாக வெற்றிப் பெறுவீர்கள்.
பணியிட சூழல் ஏதுவாக இருக்காது. பணிகள் இன்று அதிகமாக காணப்படும். அசௌகரியங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் துணையுடன் கருத்து பரிமாற்றத்தில் தடுமாற்றம் காணப்படும். இது உங்களுக்கு கவலையே அளிக்கும். இன்று உங்களின் குடும்ப வளர்ச்சிக்காக பணம் செலவுச் செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். இன்று சேமிப்பு குறையும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றத்தை பெறலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். நீங்கள் முருக வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.