சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது
தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை எடுத்து ஹிந்தி பாடல்களை பாடி அதன் மூலம் குழந்தைகளுக்கு அதனை கற்றுக்கொடுக்கிறார். உனக்கென்ன வேணும் சொல்லு, இதுவரை இல்லாத உணர்விது போன்ற தமிழ் பாடல்களின் உதவியினாலும் இன்கேம் இன்கேம் காவாலே போன்ற பிரபல தெலுங்கு பாடலின் உதவியினாலும் ஹிந்தி பாடல்களை பாடி அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார்.
அதன்பிறகு வாட்ஸ்அப் மூலமாக தனது மாணவர்களுக்கு அனுப்பிவைத்து குழந்தைகளுக்கு பிரபு எளிதாக கற்றுக் கொடுத்து விடுகிறார். புதிய திட்டம் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 4, 5, 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி கற்று தரும் பிரபு பொது அறிவு தொடர்பான படங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து கேள்விகளுக்கு சிறந்த பதில்களை கூறுபவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி ஊக்குவித்து வருகிறார்.