Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக சென்ற பெண்…. பயிற்சியாளர் செய்த செயல்…. காவல் நிலையத்தில் புகார்….!!

 கார் ஓட்டி பழக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த  பயிற்சியாளர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்றுக்கொடுக்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளது. அங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனம் ஓட்டுவதர்கு  பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்திற்கு, விண்ணப்பித்து பெற்று  கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊட்டியில் ஒரு தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இளம்பெண் ஒருவர்  கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவருக்கு பயிற்சியாளரான அருண் என்பவர் கார் ஓட்ட கற்று கொடுத்தார். இதற்கிடையில் சம்பவத்தன்று லவ்டேல் பகுதியில் கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது. இளம் பெண்ணுக்கு அருண் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் நேற்று முன்தினம் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் அருண் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |