Categories
Uncategorized

தமிழகத்தில் கடந்த ஆண்டு 177 முதியவர்கள் கொலை…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 177 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்,தேசிய குற்ற ஆவண காப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மிக அதிகமாக 209 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 177 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிராவில் 162 பேரும், மத்திய பிரதேசத்தில் 114 பேரும், கர்நாடகாவில் 76 முதியவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிராக 56 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

565 முதியவர்கள் லேசான காயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். 17 பேர் கொடும் காயத்துக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் முதியவர்களை குறிவைத்து 569 திருட்டு, 190 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. பெரு நகரங்கள் வரிசையில் சென்னையில் தான் மிக அதிகமாக பத்து முதியவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். அவற்றில் பெரும்பாலும் ஆதாயக் கொலைகள் ஆகும். சில சம்பவங்களில் இன்னும் துப்பு தொடங்காத நிலையில் உள்ளது.

Categories

Tech |