கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது.
லண்டன் ஆக்சிபிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு மார்ச் மாதம் 4 ஆம் தேதி அழைத்து செல்லப்பட்டார்.
அதன்பிறகு மறுநாளே காவல்துறை அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக பெரிக்கில்ஸ் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெப்பநிலை மைனஸ் 1 டிகிரியில் இருந்தபோதிலும் காவல்துறையின் மூத்த அதிகாரியான பூபிந்தர் கல்சி என்பவர் பெரிக்கில்ஸை வெளியேற்றியுள்ளனர். அதன்பிறகு கடுமையான குளிரில் 5 மணி நேரம் உடலில் அசைவுகள் இல்லாமல் இருந்த அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் அவர் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவரை வெளியேற்றிய காவல்துறையினர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற விசாரணையில் முதியவரை வெளியேற்றிய காவல்துறை அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள் . முதியவரை கடும் பனியிலும் வெளியே அனுப்பிவிட்டு அவர் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்து முடிந்துள்ளது. குறைந்த வெப்பநிலையினால் தான் முதியவர் இறந்ததாக தெரியவந்துள்ளது. அதோடு காவல்துறையினரின் செயலால்தான் அவர் உயிரிழந்தார் என்றும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கு அந்த முதியவர் தயாராகி இருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காவல் துறையில் இருந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்ட முதியவருக்கு எந்த ஒரு முதலுதவியும் அளிக்காமல் இருந்தது தான் அவர் இறந்ததற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் சேர்த்து தான் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே முதியவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வெம்ப்ளியில் உள்ள ஒரு அமைச்சருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் குழுவினர் 6 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் தொகையை தயார் செய்திருந்தது. குறிப்பிடத்தக்கது.