தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை கறுப்பினத்தனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், எந்த பாரபட்சமும் இல்லாமல், அனைத்து பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறியிருக்கிறது. சமூக வலைதளமான ட்விட்டர், சமீப காலங்களில் தங்களின் அசாத்திய செயல்பாடுகளின் மூலம், மக்களுக்கான தளமாக தங்களை நிலைநிறுத்தி வருகிறது.
வெறுப்பு பரப்புரை செய்த அமெரிக்க அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது என அனைத்து தளங்களிலும் தங்களை சாமானிய மக்களுக்காக முன்னிலைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.