புதுச்சேரியில் மூடப்பட்ட பழமையான சுதேசி பாரதி ஏ.எஃப்.டி பஞ்சு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.
புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க பஞ்சாலைகளான சுதேசி, பாரதி மற்றும் ஏ.எஃப்.டி பஞ்சாலைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதற்கான அறிவிப்பை பஞ்சு ஆலையின் மேலாண் இயக்குனர் வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மூடப்பட்ட பஞ்சு ஆலயங்களை உடனடியாக திறந்து புதுப்பித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் பஞ்சு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் சுதேசி மில் அருகில் இருந்து தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.