உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே அமைந்த பெருமாள்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். 53 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கொண்டார். அதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் சிகிச்சை, அங்கு பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.