கொரோனா பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கிட் ஒன்றை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
கொரோனா பரிசோதனை முடிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ரெலியன்ஸ் லைஃப் சயன்ஸ் நிறுவனம் ஒரு கிட்டை உருவாக்கியுள்ளது. அந்த கிட்டுக்கு ஆர்டி பிசிஆர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது கொரோனாவின் பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் வழங்கும். தற்போது ஆர்டி பிசிஆர் கிட் மூலமாக பரிசோதனை செய்யப்படும் கொரோனா முடிவுகள் வெளியாக 24 மணி நேரம் ஆகிறது. அந்த கிட் ஆராய்ச்சி கூடத்தில் ஒரு வைரஸின் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ நிகழ்நேர பிரதிபலிப்பை ஆராய்கிறது.
அதுமட்டுமன்றி சார்ஸ் கொரோனாவில் இருக்கின்ற நியூக்ளிக் அமிலங்களை அடையாளம் காண்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நியூக்ளிக் அமிலம் காணப்படுகிறது. இந்தநிலையில் ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கொரோனாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட மரபணுக்களை பகுப்பாய்வு செய்யக்கூடிய புதிய கிட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து தொழில்நுட்ப அதிகாரத்தை நிறுவனம் பெற்றுள்ளது.