Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை முதல் 6ம் தேதி வரை திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில்  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 9வது நாளாக பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை இந்த போராட்டம் தொடரும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் வேளாண்  சட்டங்களுக்கு எதிராகவும் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் நாளை முதல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு டிராக்டர் பேரணி தொடங்கும் என்றும், பஞ்சாபில் தொடங்கும் இந்த பேரணி ஹரியானாவில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |