Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… செய்த பெண்… மூளையை துளைத்த குச்சி… இறுதியில் நடந்த சோகம்…!!!

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்யும்போது பெண்ணின் மூளையை துளைத்து மூக்கு வழியாக மூளை திரவம் கசிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதையும் உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனை முறை கையாளப்பட்டு வருகின்றது. அந்தப் பரிசோதனையில் மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சார்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்கும் சமயத்தில், பரிசோதனை மேற்கொண்டவரின் கவனக்குறைவால், அந்தக் குச்சி மிக வேகமாக சென்ற மூளையின் சுற்றுப்புற அமைப்பு குறைத்துள்ளது.

அதனால் மூளையைச் சுற்றியுள்ள திரவம் மூக்கு வழியாக அந்தப் பெண்ணுக்கு கசியத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர விபத்து கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது.

Categories

Tech |