கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய சீன ராணுவ தளபதிகள் இடையிலான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரு நாடு இராணுவ தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் முப்பதாம் தேதி அன்று இருநாட்டு தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் எல்லைக் கோட்டுப் பகுதியில் ஸ்திரத்தன்மை நிலவ இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் கிழக்கு லடாக்கில் இருநாட்டு இராணுவ தளபதிகள் இடையே அடுத்த வாரம் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.