தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெண்கள் உயிர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அந்த வீட்டில் சமன் மீர் சச்சார்வி மற்றும் அவரது மகள் வியன் என இருவர் வசித்து வந்தது தெரியவந்தது.
ஆனால் தீயில் இறந்து கிடந்தது அவர்கள் இருவர் தானா என்பது உறுதியாக தெரியவரவில்லை. மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பெண்களின் மரணமும் சந்தேகத்திற்குரியது என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.