Categories
தேசிய செய்திகள்

புறப்பட்டுவிட்டார் ராகுல் காந்தி… இனி எவராலும் தடுக்க முடியாது… சாலை முழுவதும்… போலீஸ் குவிப்பு…!!!

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் குழு உத்திரபிரதேசம் புறப்பட்டுவிட்டது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு உத்திரப் பிரதேசத்திற்கு புறப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் புறப்பட்டு செல்கிறார்கள்.

அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தும் வகையில் நொய்டா பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் வருகையால் பகுதி முழுவதும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதை உலகில் எதுவும் தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Categories

Tech |