வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வேர்வை துளிகள் கழுத்து பகுதியில் தேங்கி கருமை நிறமாக மாறுகிறது. அதனை போக்குவதற்கு சிறந்த ஒரு டிப்ஸை நாம் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு 1/4 டீஸ்பூன் சேர்த்து உப்பு நன்றாக கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்பு அதில் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .
கலந்து வைத்த கலவையை கழுத்தின் கருமை உள்ள பகுதியில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதினால் கழுத்தில் உள்ள கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து அழகுடனும் ,மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.