உயிரியல் பூங்காவில் ஊழியரின் கையை சிங்கம் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகல் பகுதியில் உயிரியல் பூங்காவில் Wade என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விலங்குகளைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் முன் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை பந்தாவாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரையே பார்வையாளர்கள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்க திடீரென அந்த சிங்கம் Wade-யின் கையை நன்றாக கவ்வி கொண்டது.
இதனை பார்த்த பார்வையாளர்கள் அலற ஊழியரை காப்பாற்றும் நோக்கத்தில் சிலர் சிங்கத்தின் மீது கல்லை தூக்கி வீசினர். சிங்கம் ஊழியரின் கையை தனியாக கடித்து எடுத்து விடும் என்று பலரும் அச்சத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் Wade பலமாக சிங்கத்தின் தலையில் அடிக்க அது வாயைத்திறந்த நொடி தனது கையை விடுவித்து விடுகிறார்.
கையில் ரத்தம் சொட்ட சொட்ட பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் சிங்கம் அவரது கையை கவ்வியதும் அவர் பிறகு தன்னை ஆசுவாச படுத்துவதையும் பார்க்க முடியும். மேலும் சில வீடியோக்களில் Wade அந்த சிங்கத்தை துன்புறுத்துவதை காணமுடிகிறது. இதனால் தான் தக்க சமயம் பார்த்து சிங்கம் Wade-யை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.