Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…!! சிந்தனை மேலோங்கும்..! சேமிப்பு தேவை..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று சற்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் இலக்குகளையடைய நீங்கள் சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டியதிருக்கும்.

எனவே நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்கள் பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை ஒழுங்கு முறைப்படுத்தி பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இன்றைய நாளை உங்களின் துணையுடன் கழிப்பதற்கு உகந்தநாள் அல்ல. இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படாது. உங்களின் நிதிகளை கையாள்வதில் சற்று கடினம் காணப்படும். மன எழுச்சி மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பது நல்லது. இது உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வதன்மூலம் நன்மைகளைப் பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |