Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 உறவினர் வீட்டிற்கு சென்ற… 16 வயது சிறுவன்… கிணற்றில் குளிக்க… சென்றபோது… நடந்த சோகம்…!!!

ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளான்.

அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக சிறுவன் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரமாக போராடி சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |