Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மந்தநிலை நிலவும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு மந்தமான நாளாக இருக்கும். உங்களின் பணிகளை முடிப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனையளிக்கும். இன்று அதிகப்பணிகள் காணப்படும். அததைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கருத்து வேறுபாடு காரணமாக உங்களின் பிரியமானவர் உங்கள்மீது இன்று குற்றம் காண்பார்கள். நிதி வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்காது. பணத்தை கையாள்வதில் சிரமம் காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தலைவலியால் பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் மட்டும் சற்று விழிப்புணர்வுடன் நடந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |