ரவா லட்டு எப்படி செய்வது என்று இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப்
நெய் – 2 டீஸ்பூன்
வறுத்த தேங்காய் – 1 /2 கப்
அரைத்த சீனி – 1 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
பாதாம், முந்திரி – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை
முதலில் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு ஒரு கப் ரவையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 2 நிமிடங்கள் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து நெய்யில் வறுத்த தேங்காய், ஒரு கப் அரிசி, ஏலக்காய் பொடி சேர்க்கவும். பிறகு நறுக்கிய பாதாம், முந்திரியை சேர்க்கவும். அனைத்தையும் கலந்து நன்றாக ஐந்திலிருந்து 10 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டு இருக்கவும்.
பிறகு அடுப்பை அனைத்து விட்டு மூடி வைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து மிதமான சூட்டில் உள்ளங்கையால் உருண்டை பிடித்து வைக்கவும். இப்பொழுது ரவா லட்டு தயார்.