தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 1 கப்
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 3/4 கப்
கலர் பவுடர் – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
சீனி – 2 கப்
லெமன் சாறு – 1/4 டீஸ்பூன்
சுகர் சிரப் செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர், 2 கப் சீனி, 1/4 டீஸ்பூன் லெமன் சாறு என மூன்றையும் சேர்த்து கொதிக்க விடவும். சுகர் சிரப் தயாராகிவிடும். பின்பு அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
ஜிலேபி செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் மைதா மாவு ஒரு கப்,நெய் ஒரு டீஸ்பூன், சோள மாவு 3 டீஸ்பூன் சேர்க்கவும். சோளமாவு சேர்ப்பதனால் ஜிலேபி மொறுமொறுப்புடன் காணப்படும்.
பிறகு முக்கால் கப் தயிர், கலர் பவுடர் சேர்த்துக் கொள்ளவும். கலர் பவுடர் விரும்பாதவர்கள் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் நன்றாக கலந்து 8- 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு 12 மணி நேரம் கழித்து அந்த கலவையை எடுத்து தக்காளி சாஸ் வைக்கக்கூடிய பாட்டிலில் அல்லது கவரில் அடைக்கவும்.
வானலியில் எண்ணை சூடானதும் அடைத்திருக்கும் கலவையை ஓட்டை வழியே வரவழைத்து பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த ஜிலேபியை ஏற்கனவே செய்து வைத்திருக்கும் சுகர் சிறப்பில் போடவும். பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஜிலேபி தயார் நிலையில் இருக்கும்.