கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் மற்றும் அவரின் மனைவி விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக ஜோ பிடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக, ஜோ பிடன் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற ஜோ பிடன் கூறுகையில், அமெரிக்க அதிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கொரோனாவின் தீவிரத்தை நினைவூட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.அதனைப்போலவே அமெரிக்க அதிபர் மற்றும் அவரின் மனைவி கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்வதாக முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.