புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் போராட்டம்.
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை தாக்கிய காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.