வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ரோட்டில் இளம்பெண் நடனமாடியது காணொளியாக வைரலாகி வருகிறது
ஒவ்வொரு நாளும் பல காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இளம்பெண்ணின் காணொளியும் பல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. அந்த காணொளியில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் ரோட்டில் நடனமாடியுள்ளார்.
இதனை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த பெண்ணிற்கு வேலை கொடுத்த முதலாளி அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நான் இப்போதுதான் அந்தப் பெண்ணை வேலைக்கு தேர்ந்தெடுத்தேன். அதற்கு அந்தப் பெண்ணின் ரியாக்ஷன் இதுதான்” என பதிவிட்டிருந்தார். இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த காணொளியை பார்த்துள்ளனர். ரோட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டுதான் மகிழ்ச்சியில் நான் நடனம் ஆடினேன். ஆனால் நான் நினைத்தது மிகப்பெரிய தவறு என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CFvR5L8AnTU/?utm_source=ig_web_copy_link