Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையை துண்டும் காளான் கிரேவி …. எளிமையாக செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

காளான்                – ஒரு கப்
கோஸ்                    – ஒரு கப்
மைதா மாவு       – கால் கப்
சோள மாவு         – கால் கப்
அரிசி மாவு          – கால் கப்
மிளகாய்த்தூள்  – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா      – ஒரு டீஸ்பூன்

காளான் கிரேவி செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோஸ் ஒரு கப், மைதா மாவு கால் கப், சோள மாவு கால் கப், அரிசி மாவு கால் கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா ஒரு டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து கலவையாக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் ஏற்கனவே வைத்திருக்கும் கலவையை எடுத்து அதில் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த காளானை சிறுசிறு துண்டுகளாக மசித்து தனியாக வைக்கவும்.

பிறகு மற்றொரு வாணலியை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 2 டீஸ்பூன், வெங்காயம் ஐந்து நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது, 2 மிளகாய் நறுக்கியது, கருவேப்பிலை, 3 தக்காளி அரைத்தது, மிளகாய் தூள் ,கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கியபின் மசித்து வைத்துள்ள காளானை அதில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கிளறி  இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்.

Categories

Tech |