Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனநலம் பாதிக்கப்பட்ட தாய்…. கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த தந்தை-மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தந்தை மகள் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில்  ஜார்தாகொல்லைமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள்  பொன்னுசாமி – பாஞ்சாலை தம்பதியினர் . இவர்களுக்கு  தீபா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். அங்குள்ள ரங்கப்பன்கொட்டாய் இடத்தில்  அன்வர்பாஷா என்பவரது  விவசாய நிலத்தில் பொன்னுசாமி தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.பாஞ்சாலை  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருக்கின்றனர்.

காலை நேரத்தில் பொன்னுசாமி அதிக நேரம் ஆகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர் . அப்போது தந்தையும் ,மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்தனர். வேறு அறையில் இருந்த மனைவிக்கு எதுவும் ஆகவில்லை. தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு மண்டல டிஜஜி, ஏஎஸ்பி ஆகியோர் மோப்ப நாய்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |