Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுட்ட வத்தல் சட்டினி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்   – 3
வத்தல்                               – 4
புளி                                      – சிறு துண்டு
பூண்டு                               – 8 பல்
கருவேப்பிலை                  – 4-5
கடுகு                                   – 1/4 டீஸ்பூன்
எண்ணெய்                       – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் 3 பெரிய வெங்காயம், 4 காய்ந்த மிளகாய், பூண்டு 8 பல் மூன்றையும் தீயில் சுட்டெடுக்க  வேண்டும். அதை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் கருவேப்பிலை,கடுகு,புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அதன்பின் வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் விழுதயும் சேர்த்து வதக்கி கொள்ளவும். இறுதியில் மிதமான சூட்டில் இறக்கி வைத்தால் சுவையான சுட்ட வத்தல் சட்டினி ரெடி.

Categories

Tech |