கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் காதலனின் கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு கங்கப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கப்பாவின் பெற்றோர் ஒரு வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணை கங்கப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு கங்கப்பா கல்பனாவுடன் இருந்த உறவை கைவிட்டுள்ளார். இதனால் கல்பனாவிற்கு ரோகினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தனக்கும் கங்கப்பாவிற்கும் இடையில் வந்த ரோகிணியை கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரோகினி தனது உறவினரான ராஜஸ்ரீ என்பவருடன் சேர்ந்து வாக்கிங் சென்றுள்ளார். இதனை அறிந்த கல்பனா கர்ப்பிணி என்றும் பாராமல் வாக்கிங் சென்ற ரோகிணியை உறவினர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து சரமாரியாகத் தாக்கி கொலை செய்தார். உடனிருந்த ராஜஸ்ரீ இவர்கள் கொலை செய்ததை பார்த்துவிட்டதால் அவரையும் அடித்து கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.