மந்திரித்த தாயத்து தருவதாக மோசடியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று மந்திரித்த தாயத்து தருவதாக ஏமாற்றி 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த 4 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இனி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட மாட்டோம் என பொலிசார் முன்னிலையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.