பில்லி சூனியம் வைத்து பெண்ணை இரண்டு பழங்குடிப் பெண்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் அவர்களை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் இருக்கும் ஆங்லாம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊர் தலைவரின் மகளுக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுத்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே பில்லி சூனியம் வைக்கும் பழங்குடியினப் பெண்கள் இருவரால் தான் ஊர் தலைவரின் மகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.
இதனால் ஆத்திரம் கொண்ட கிராம மக்கள் இரண்டு பழங்குடி பெண்களையும் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.