Categories
அரசியல் மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அதிமுக-வின் முக்கிய அமைச்சர் திடீர் சந்திப்பு …!!!

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார்.

சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்திருக்கின்றது . சில நாட்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது  என்றும் கூறப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில்  பங்கேற்பதற்காக  சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ் தற்போது மீண்டும் தேனி திரும்பியுள்ளார்.சென்னையில் இருக்கும்போது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் பலருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்பொழுது அதிமுகவின் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் ஓ பன்னீர்செல்வம் அவர்களை  தேனியில் சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் சார்ந்த சந்திப்பா என்று அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில் இது அரசியல் சார்ந்த சந்திப்பு அல்ல எனவும் உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவரின் சிலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிடுவதற்காகவே ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |