Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிணவறையில் அதிர்ச்சி… சிக்கிய மருத்துவமனை நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்சார கம்பி உரசி ஆறுமுகம் மற்றும் முருகன் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் உடன் பணிபுரிந்து கொண்டு இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் முருகனுக்கு தீவிர சிகிச்சை கொடுத்தனர் ஆனால் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இறந்த ஆறுமுகத்தின் உடல் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய பிணவறையில்  இருந்து ஆறுமுகத்தின் சடலத்தை எடுத்தபோது அவரது கால் விரல் மற்றும் மூக்கு பகுதிகளில் எலி கடித்து குதறியது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதோடு ஆறுமுகத்தின் உறவினர்களுக்கும் இந்த தகவல் தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் வாக்குவாதம் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆறுமுகம் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். அதன் பிறகு ஆறுமுகத்தின் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை முடிந்த பிறகு வாங்கி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |