உலக சுகாதார நிறுவனம் பார்வை குறைபாடு மற்றும் பார்வையின்மை குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வருடம் தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன் அன்று உலக கண் பார்வை தினமாக அறிவிக்கப்பட்டு கண்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் அக்டோபர் எட்டாம் தேதி உலக கண் பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது.
கண்பார்வை பிரச்சனைகள்
• 43% திருத்தப்படாத பார்வைத்திறன் பிரச்சினை. அதாவது ஒழுங்கற்ற பார்வைத்திறன், தூரப்பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை குறைபாடு போன்றவை ஆகும்.
• 2% க்ளகோமா என்ற கண் அழுத்த நோய் ஆகும்.
• 33% அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த படாத கண்புரை பிரச்சனை.
யார் கண் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்?
வல்லரசு நாடுகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் பார்வை குறைபாட்டுடன் இருக்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் 90 சதவீத மக்களுக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 65% பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும் 19 மில்லியன் குழந்தைகள் பார்வை குறைபாடுடன் இருக்கின்றனர்.
இவர்களில் 1.4 மில்லியன் குழந்தைகள் சரி செய்ய முடியாத பார்வை குறைபாட்டுடன் இருக்கின்றனர். 12 மில்லியன் குழந்தைகள் எளிதாக சரி செய்துவிடக்கூடிய பார்வை குறைபாடுடன் உள்ளனர். இவ்வாறு பார்வை குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் ஆளுமை வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் போன்றவற்றினால் அவர்களது வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியும்.