ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நமது கண்கள் பற்றிய உண்மைகள்
• பத்தாயிரம் வேலைகளை செய்யும் பாகங்களைக் கொண்டது நமது கண்கள்.
• சராசரியாக ஒரு நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை மனிதன் தனது கண்களை இமைக்கிறான். அவ்வகையில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முறை நாம் கண்களை இமைக்கிறோம்.
• சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு நமது கண்கள் 36 ஆயிரம் பைட் தகவல்களை சரியாக கையாள்கிறது.
• ஆறு பாகங்கள் கொண்ட நமது கண்ணில் ஒரு பக்கம் மட்டும் தான் வெளியில் தெரியும்.
• ஒரு நொடிப் பொழுதில் நமது கண்கள் 50 பொருட்களின் மீது தனது பார்வையை பதிய செய்கிறது.
• சராசரியாக நமது கண்கள் 28 கிராம் எடை கொண்டது.
• நமது கண்ணில் இருக்கும் இமைமுடிகளின் ஆயுள்காலம் ஐந்து மாதங்கள் மட்டுமே.
• கண்களின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் தசைகள் நமது உடலிலேயே மிகுந்த சக்தி வாய்ந்த தசையாகும். அவை 100 மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கும்.
• நம் மூளையின் பாதிப் பகுதி பார்வையின் செயலில் பங்காற்றுகிறது
• சரியான கண் பார்வை இருந்தால் 14 மைல்கள் தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை நம்மால் பார்க்க முடியும்.